தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் நெடுந்தீவு பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் நீர்த்தாங்கியில் உள்ள சேதமடைந்த குளாய்கள் திருத்தம் செய்யப்பட்டு நாளை (செப். 24) முதல் குடிநீர் விநியோகம் வழமைக்கு திரும்பவுள்ளது.
எனவே கடந்த செப்.20 முதல் தடைப்பட்ட குடிநீர் விநியோகம் நாளைமுதல் சீராக இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நெடுந்தீவு பிரிவினர் அறிவித்துள்ளனர்.