நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை நடாத்தும் Bishop Cup 2025 மென்பந்து துடுப்பாட்டத் தொடர் நேற்றைய தினம் (ஓகஸ்ட் 17) நெடுந்தீவில் ஆரம்பமானது.


நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் கோலகலமாக இடம்பெற்றது.

அருட்பணி சோபன் றூபஸ் அடிகளாரின் ஆசீர் செபத்தை தொடர்ந்து திருஅவையின் கொடியினை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப .பத்திநாதன் அடிகளார் ஏற்றிவைக்க போட்டித்தொடர் ஆரம்பமாகி இடம்பெற்றது.


தமிழுக்கும் திருமறைக்கும் அளப்பரிய பங்காற்றிய நெடுந்தீவு மண்ணின் மைந்தனும் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயருமான அதிவந்தனைக்குரிய இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாகவும் இளையோர் மற்றும் மாணவர்களின் திறமைகளுக்கு களமமைக்கும் முயற்சியாக நடாத்தப்படுவதே Bishop Cup என்பது குறிப்பிடத்தக்கது.