நெடுந்தீவு மண்ணின் மைந்தன் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான – BIshop cup 2025 இன் தொடரில் இதுவரை இடம்பெற்ற கிளித்தட்டு போட்டியில் இறுதிப் போட்டிக்கான அணிகள் தேர்வாகியுள்ளன.

கிளித்தட்டு இறுதியாட்டத்திற்கு சென். ஜோசப் அணி மற்றும் மடு அன்னை அணி ஆகிய இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.