நெடுந்தீவு மண்ணின் மைந்தன் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான BIshop cup 2025 இன் இறுதிப் போட்டிகள் இன்றைய தினம் (செப். 14) சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
நிகழ்வின் விருந்தினர்கள் நெடுந்தீவு மகா வித்தியாலய மேலைத்தேய வாத்திய குழுவின் அணிவகுப்புடன் போட்டிகள் இடம்பெறவுள்ள நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அரங்க நிகழ்வின் ஆரம்பமாக இறை ஆசீரினை வேண்டி செபத்தினை அருட்திரு சோபன்றூபஸ் அடிகளார் வழங்கியிருந்தார்.
நிகழ்வின் ஆயரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை நிகழ்வின் பிரதம விருந்தினரான யாழ் மறை மாவட்ட கரித்தாஸ்- கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி டெனீசியஸ் அடிகளார் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மங்கள ஒளியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. ஒளியேற்றலினை நிகழ்வின் பிரதம விருந்தினரான யாழ் மறை மாவட்ட கரித்தாஸ்- கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி டெனீசியஸ் அடிகளார், நிகழ்வின் தலைவரும் நெடுந்தீவு பங்குத்தந்தையும் ஆகிய அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் , நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர்மட தலைவி அருட்சகோதரி சுகிர்தா செல்வி, நெடுந்தீவு பிரதேச்சபை உபதவிசாளர் ஆகியோருடன் இணைந்து நிகழ்வின் விருந்தினர்களும் ஏற்றிவைக்க போட்டித்தொடரின் இறுதி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய நிகழ்வுகள் யாவும் எமது இணையத்தளம் ஊடக நேரலையில் பார்வையிடமுடியும் என்பதையும் மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.