நெடுந்தீவில் 100 மாணவர்கள் 2024 க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட் பாடசாலைகளில் இருந்து 43 மாணவர்கள் இம்முறை க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

2024 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை நேற்றையதினம் (மார்ச்17) ஆரம்பித்துள்ள நிலையில் நெடுந்தீவு கோட்டத்திற்கான பரீட்சை நிலையமாக நெடுந்தீவு மகா வித்தியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் உள்ள மாகாவித்தியாலயத்தில் இருந்து 24 பேரும் , றோ. க. மகளிர் கல்லூரியில் இருந்து 13 பேரும் , சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இருந்து 06 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்ற நிலையில் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக சுமார் 50 பேர் வரையில் பரீட்சைக்கு தோற்றுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article