நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கு நல்லூர் ரோட்டரிக்கழகமும் , இந்திய ரோட்டரிக்கழக RI District 2982 பிரிவும் இணைந்து ஐந்து துவிச்சக்கரவண்டிகளை அண்மையில் கையளித்துள்ளன.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்குட்பட்ட , தொலைவில் இருந்து வருகின்ற தெரிவு செய்யப்பட்ட 05 மாணவர்களுக்கே இவ் உதவித்திட்டம் வைபவரீதியாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தினத்தில் ரோட்டரிக் கழகத்தினரால் பாடசாலைவளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.


இச்செயற்பாடுகளை பாடசாலை பழையமாணவரும் மருத்துவருமாகிய மகேசுபிரதீபன் அவர்கள் ஒருங்கினணத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.