நெடுந்தீவில் மறைக்கல்வி போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிறீஸ்தவ அலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில் தேசிய ரீதியில்நடாத்தப்பட்ட மறைக்கல்வி போட்டியில் அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்டமாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கெளரவிக்கும்நிகழ்வு நெடுந்தீவுப் பங்கில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே25) புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றநிகழ்வில் தேர்வில் வெற்றியீட்டிய 63 மாணவர்கள் இவ்வாறுகெளரவிக்கப்பட்டனர்.

வெற்றியாளர்களுக்கான  பதக்கம் மற்றும் சான்றிதழை அருட்பணி சோபன்றூபஸ் அடிகளார், கன்னியர்மட முதல்வர் அருட்சகோதரி சுகிர்த செல்வி மற்றும்றோ.க.மகளிர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரீனா ஆகியோர்வழங்கிவைத்தனர்.

Share this Article