நெடுந்தீவில் பாரம்பரிய உணவுக் கலாசாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்    “பாரம்பரிய உணவுக் கலாசாரம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்” எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு கடந்த வியாழன் (ஒக்.29) இடம்பெற்றது

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச ஆயுள்வேத வைத்திய அதிகாரி பெரோன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு விழிப்புணர்வு வழங்கினார்.

இந்நிகழ்வில் பாரம்பரிய உணவுகள் எவை,அவற்றை மீண்டும் உண்ண வேண்டியதன் அவசியம், அவற்றில் காணப்படும் போசணைக் கூறுகள், உணவை உட்கொள்ள வேண்டிய விதம், உணவு நஞ்சாகுதல், இரசாயன பாவனையின்பின் மரக்கறிகளை பயன்படுத்தல் இதனால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் தீமைகள் தீமைகள் நோய்கள் போன்றனவும் விரைவு உணவுகளால் உடலுக்கு ஏற்படும் நீண்டகால நோய்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் வித்தியாலய அதிபர் கலாச்சார அலுவலர் மாணவர்கள் என  பலர் கலந்துகொண்டனர்

Share this Article