நெடுந்தீவில் நேற்று இடம்பெற்ற இருவேறு கைகலப்பில் இருவர் காயம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் நேற்றையதினம் (செப். 12) இடம்பெற்ற இருவேறு கைகலப்பில் இருவர் காயமடைந்து நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவங்கள் தொடர்பில் ..

நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்து நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் நெடுந்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு 06 ஆம் வட்டாரப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் நெடுந்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவருகின்றது.

Share this Article