நெடுந்தீவில் நற்குண முன்னேற்ற அமைப்பினூடாக மாணவர்களுக்கு காலணிவவுச்சர்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நற்குண முன்னேற்ற அமைப்பின், நெடுந்தீவு இதயத்துடிப்பு வலுவூட்டல்நிலையத்தில், கல்வி பயிலும் 109 மாணவர்களுக்கு ரூ.3500.00 பெறுமதியானபாடசாலைக்கான காலணி வவுச்சர்கள் நேற்றையதினம் (செப். 12) நெடுந்தீவு அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

நற்குண முன்னேற்ற அமைப்பின், நெடுந்தீவு இதயத்துடிப்பு வலுவூட்டல்நிலையத்தில் கல்விகற்கும் தரம் 5, தரம் 6, தரம் 7, தரம் 8, தரம் 9, தரம் 10, தரம் 11 மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

திரு,திருமதி சிவேந்திரா அவர்களால் உறவினர்  வைத்தியர் தியாகராஜா நாகேந்திராஅவர்களின் நினைவாகவே இவ் வவுச்சர்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article