நெடுந்தீவில் தொடர்சியான மழையும் கடற்கொந்தளிப்பும் காணப்படுகின்றது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

. தற்போது ஏற்பட்டுள்ள புரெவி புயல்தாக்கத்தின் காரணமாக நெடுந்தீவு கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் தொடர்ச்சியான மழையும் காணப்படுகின்றது நேற்றைய தினம் தொடக்கம் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டாலும் இன்றைய தினம் அதிகரித்த நிலைகாணப்படுகின்றது.

கடல்கொந்தளிப்பின் காரணமாக கரையோரங்கiளினை அண்டிய வீடுகளுள் கடல் நீர்; உட்புகுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதுடன் கடும் காற்றும் காணப்படுகின்றது.


கடற்தொழில் படகுகள் இக்காலப்பகுதிகளில் பாதுகாப்பாக பராமரிப்பதற்கான இடவசதியின்மையால் கடற்தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்படுவதுடன் கடற்தொழில் உபகரணங்களை பல சிரமத்தில் மைத்தியில் பாதுகாக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்

இரண்டு நாட்களாக கடற்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது காலநிலையினைக் கருத்திற் கொண்டு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் மழைகாரணமாக பிரதான வீதிகள் மேலும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாலும் மக்களது போக்குவரத்துக்கு மிகவும் கடினப்படுகின்றனர்

Share this Article