நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவுஎழுச்சி நிகழ்வு இன்றையதினம் (செப்.26) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

மாலை 4.00 மணிக்கு நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் இரங்கல்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து நெடுந்தீவு தாளைத்துறைகடற்கரை பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவுகலங்கரைவிளக்கத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், நினைவுச் சுடரும் ஏற்றிவைக்கப்பட்டு பொதுமக்கள் மலர் அஞ்சலிசெலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.