நெடுந்தீவில் தவக்கால ஆற்றுகை “பலிக்களம்” !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் நெடுந்தீவு சென் அன்ரனிஸ் முத்தமிழ் நாடக மன்றம் வழங்கும் தவக்கால ஆற்றுகை “பலிக்களம்” ஏப்ரல் 06 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் மேடையில் ஏப்ரல் 06 மாலை 7.30 மணிக்கு அரங்கேறவுள்ளது “பலிக்களம்“ தவக்கால ஆற்றுகை.

கலைத்தூது அருட்பணி மரிய சேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவான“பலிக்களம்” தவக்கால ஆற்றுகை நெடுந்தீவு மண்ணில் பங்குத்தந்தைஅருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின் மேலான ஆலோசனை மற்றும்தலமைத்துவத்தின் கீழ் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article