நெடுந்தீவில் சிறப்பாக நடந்து முடிந்த சிறப்பு மருத்துவ முகாம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (செப்.12)  யாழ் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஏற்பாட்டில் “நெடுந்தீவு சுகாதார விழா” சிறப்பாகவும், மக்களுக்கு பயனுடையதாகவும் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வின் விருந்தினர்கள் நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மாணவிகளின் மேலைத்தேய இசை வாத்திய குழு அணிவகுப்புடன் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு மங்கல விழக்கேற்றலுடன்  நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அரங்க நிகழ்வுகளுடன் நினைவு மரநடுகை நிகழ்வு வைத்தியசாலை வளாகத்தில் விருந்தினர்களால் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து மக்களுக்கான மருத்துவ சேவைமுகாம் பெருமளவு பயனர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இன்றைய நிகழ்வின்போது யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன், யாழ். மருத்துவபீட பீடாதிபதி வைத்தியர் சுரேந்திரகுமார், நெடுந்தீவு பிரதேச்சபை தவிசாளர் ச.சத்தியவரதன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் என். பிரபாகரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமண் பத்திரண, வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், மாகாண அசத்த மருத்துவதுறை பணிப்பாளர் சர்வானந்தன் , யாழ் மருத்துவபீட தலைவர் , புற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, கடற்படை அதிகாரி, நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி, வேலணை சுகாதார வைத்திய அதிகாரி, ஊர்காவற்றுறை வைத்திய அதிகாரி மற்றும் மருத்துவதுறை அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article