நெடுந்தீவில் சமுர்த்தி அபிமானி சந்தை நிகழ்வு நாளை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கமும் , சமுர்த்தி வங்கியும் இணைந்து நடாத்தும் சமுர்த்தி அபிமானி சந்தை நிகழ்வு 02 நாட்கள் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி தலைமையக முகாமையாளர் நா.நகுலராணி தலைமையில் நாளை (ஏப்ரல்07) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ள சந்தை நிகழ்வின் முதன்மை விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

சமுர்த்தி அபிமானி சந்தை நிகழ்வு நாளை மறுதினமும்(ஏப்ரல்08)இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article