நெடுந்தீவில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் தற்போது பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் கடும் மழையால் செபநாயகபுரம் பகுதியிலுள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அப்பகுதி மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க வித்தியாலயத்தில் தற்போது 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கான உணவு தேவைகள் தங்குமிடத்திலேயே சமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால், மேலும் பலரை இடம்பெயர்த்தல் அவசியமாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், கிராம அலுவலர்களின் மேற்பார்வையில் இடர் நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Article