நெடுந்தீவில் உயிருடன் பிடிபட்ட முதலை வன ஜீவராசிகள் அலுவலகத்தில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் இன்றையதினம் (ஜூலை 18) மாலை வேளை முதலை ஒன்று உயிருடன் பிடிபட்டுள்ளது. 

நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த  கிணற்றில் இருந்தே இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு பிரதேச சபையின் உபதலைவரின் பிரசன்னத்துடன் அங்கிருந்து மீட்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதனை குறித்த திணைக்களத்தினர் கடலில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டபோது , அதனை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததினை தொடர்ந்து. திணைக்களத்தின் கிளிநொச்சி அலுவலகம் ஊடாக மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.


நெடுந்தீவுக்கு எவ்வாறு
முதலை வந்தது, மற்றும் இன்னும் வேறு முதலைகள் தீவுக்குள் உள்ளதா, எனும் கேள்விகளுடன் இதற்கான நிரந்தர தீர்வு ,பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பு என்பன தொடர்பிலும் மக்கள்  பெரும் அச்சத்துடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article