நெடுந்தீவில் இடம்பெற்ற விபத்த்தில் சிக்கிய இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கில் இன்று (ஓகஸ்ட் 14) மாலை இடம்பெற்ற இரு மோட்டார்சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் பாடுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நால்வரையும் உடனடியாக  நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் நிலமையினை கருத்தில் கொண்டு உடனடியாகவே மேலதிக சிகிச்சைக்காக  யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நெடுந்தீவு மேற்கு சாறாப்பிட்டி வீதியும் முப்பது வீட்டுத்திட்ட வீதியும் சந்திக்கும் இடத்திலேயே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பத்மநாதன் தர்சிகா மற்றும் சிவகுமார் றதீப் ஆகியோர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை விபத்தில் காயமடைந்த தர்மலிங்கம் ஜெயரங்கன் மற்றும் கருணானந்தன் தயானந்தன் ஆகியோர் சிகிச்சையின் பின்னர் விபத்துப் பிரிவு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை நெடுந்தீவு பிரதேச பொலிசார் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article