தேசிய மறைக்கல்வி வார நிறைவை முன்னிட்டு நெடுந்தீவில் உள்ள அனைத்து மறைப் பாடசாலைகளில் மறைக்கல்வி மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் நேற்றையதினம் (செப்.28) மாலை புனித யுவானியார் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.


இடம்பெற்ற நிகழ்வுகளில் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.