நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணையும் மாநாடு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம்”
எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் Sep 26.2020 அன்று ஊரும் உறவும் நெடுந்தீவு எனும் சர்வதேச பொதுக்கட்டமைப்பினூடாக எமது தாய்மண் நெடுந்தீவில் நடாத்தப்படவிருக்கும் செயலமர்வுடன் ஊரில் வாழும் எமது சொந்தங்களை இணைத்து மாநாடு ஒன்றினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனை உலகெங்கும் வாழும் எமது ஊரின் சொந்தங்கள் இணந்து zoom தொழில்நுட்பம் ஊடாக உங்களை பார்வையிடவுள்ளனர்.
அவ்வாறு இணைந்திருக்கும் உறவுகளை ஊரில் உள்ள உறவுகள் அனைவரும் அதனூடாக பார்க்கும் வகையிலான ஒழுங்கமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே அந்த மாபெரும் நிகழ்வினை எமது மண்ணில் ஒருங்கிணைத்து திட்டமிட்டு வழிநடத்தும் வகையில் செயற்படுத்துவதற்கு ஏற்றதொரு ஒருங்கிணைப்புக் குழுவொன்றினை ஊரின் உறவுகளின் சுயவிருப்பின்பேரில் தற்காலிகமாக தேர்வு செய்துள்ளோம்.
எனவே இலங்கையிலிருந்து அந்த ஒருங்கிணைப்புக்குழுவில் இணைந்து செயற்பட விரும்புவோருக்கான கூட்டம் ஒன்றினை zoom தொழில்ஙட்பத்தினூடாக எதிர்வரும் Aug 29, 2020 சனிக்கிழமை மாலை 5.00(இலங்கை நேரம்) மணிக்கு நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
Meeting Time:- 5.00 P.M
Meeting Date:- Saturday 29/08/2020
நன்றி.
Share this Article