நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும், மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article