நல்லூர் ஆலயத்திற்கு அருகில் கோர விபத்து

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வர்த்தகம் நிலையம் ஒன்றின் கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று வியாழக்கிழமை (07 மார்ச் ) காலை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த வர்த்தக நிலைய கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் வர்த்தக நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகிய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதத்திற்குள்ளானது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article