நயினாதீவுக்கு விஜயம் செய்த ஆதிவாசி குழுவினர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதிவாசிகள் குழுவினர் இன்று(ஒக்ரோபர் 22) நயினாதீவுக்கு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக வந்துள்ள ஆதிவாசிகள் குழுவினர் இன்று காலை பொலிஸ் பாதுகாப்புடன் குறிகாட்டுவான் துறைமுகம் வந்து விசேட படகுமூலம் நயினாதீவு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற ஆதிவாசி குழுவினர் நயினாதீவு நாகவிகாரையை பார்வையிட்டதுடன் நாகவிகாரை விகாராதிபதியிடம் ஆசியும் பெற்று சென்றனர்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தையும் தரிசித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.


Share this Article