நயினாதீவில் தொடர் மின் தடையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவில் கடந்த சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வங்கிகள், பாடசாலைகள், வைத்தியசாலை, ஆலயங்கள், தபால் நிலையம் என அனைத்து நிறுவனங்களின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

நயினாதீவிலுள்ள மின் பிறப்பாக்கி பழுதடைந்தமையும், டீசல் இன்மையுமே இந்நிலைக்கு காரணம் எனவும், தற்போது இயந்திரம் திருத்தப்பட்டுள்ளதுடன் அதன் சேவையை படிப்படியாகவே அதிகரிக்க முடியும் எனவும் மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this Article