நடமாடும் சேவையை நாளை முன்னெடுக்கவுள்ள காரைநகர் பிரதேச சபை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபை நாளை(ஜூன் 22) வியாழக்கிழமை நடமாடும் சேவையை ஜெ.47 கிராம அலுவலர் பிரிவில் முன்னெடுக்கவுள்ளது.

சிவகௌரி கடற்தொழில் கூட்டுறவுச்சங்கத்தில் காலை 9.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை இந்த ‘மக்களை நாடிய சேவை” முன்னெடுக்கப்படவுள்ளது.

சேவை விபரம்
1. ஆதனவரி அறவீடு.
2. இலவச ஆயுள் வேத சித்த வைத்திய சேவையும், ஆலோசனையும்.
3. ஆதனப்பெயர் மாற்றம் தொடர்பான நடவடிக்கை.
4. வியாபார நிலையங்களுக்கான உரிமம் வழங்கல்.
5. வளர்ப்பு நாய்களுக்கான உரிமம் வழங்கல்.
6. துவிச்சக்கர வண்டி உரிமம் வழங்கல்

Share this Article