தேசிய பாடசாலைகளில் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” கற்கை – கல்வி அமைச்சு தீர்மானம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தேசிய பாடசாலைகளிலும் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் தரம் ஒன்றில் இருந்து “ஸ்போக்கன் இங்கிலீஷ்” கற்பிக்கப்பதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

தரம் 6-9 மற்றும் 10-13 வகுப்புக்களில் இருந்து அனைத்துப் பாடத் திட்டங்களையும் சர்வதேச நிலைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

2030ஆம் ஆண்டளவில் கல்வித்துறையில் புதிய இலக்கை அடைவதற்கு இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Share this Article