தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இரண்டாம் இடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

2022 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றிக்கு பாடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (ஏப்ரல் 24) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 1.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட உற்பத்தித்திறன் பிரிவுக்கு பொறுப்பான பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. க.லிங்கேஸ்வரனின் ஒருங்கிணைப்பிலும் ஏற்பாட்டிலும் சிறப்புற நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ” முல்லைச் சாகரம் ” என்னும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்டுவைத்தார். இச் சஞ்சிகையானது ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article