தேங்காய் மற்றும் இளநீரின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீரின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது அதிகரித்த வெப்பம் நிலவி வருகின்ற நிலையில் இளநீரின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் பெரிய தேங்காயொன்று 130 முதல் 150 ரூபாய் வரை நாட்டின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Share this Article