தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்டார் என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் நேற்று(ஜூலை 17) காலை பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது கிராமத்திலிருந்த சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ். மாவட்டம் தீவகத்தில் உள்ள மண்கும்பான் பகுதியில் பாடசாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை தரம் 4இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது பாடசாலை அதிபர் தாக்கினார் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டார்.

மாணவி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நேற்றுக் காலை தீவகக் கோட்டக் கல்வி அதிகாரிகள் சிலர் பாடசாலைக்கு நேரடியாகச்சென்றிருந்த நிலையில் அங்கு கூடி இருந்த சிலர் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்று தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நன்றி காலைக்கதிர்

Share this Article