தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட திருவிவிலிய போட்டி – 2024 இல் மூன்று தங்கபதக்கங்களைப்பெற்று நெடுந்தீவு கத்தோலிக்க திரு அவைக்கு பெருமைசேர்த்தமாணவிகள் மூவர் கெளரவிக்கப்பட்டனர்.

புனித யுவானியார் ஆலயத்தில் நேற்று (ஜூலை 13) காலை இடம்பெற்ற திருப்பலியை தொடர்ந்து நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன்அடிகளார் தலைமையில் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

மாணவிகளுக்கான பதக்கங்களை அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார்அணிவிக்க அருட்பணி றொபேட் ஜேக்கப் அடிகளார் சான்றிதழ்களைவழங்கிவைத்தார்.

தேசிய ரீதியில் தங்க பதக்கங்களைபெற்று பெருமை சேர்த்த மாணவிகளுக்குபலரும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.