நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த குமுதினி படகானது நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் இருந்து திருத்த வேலைகள் யாவும் முடிவுற்று பரீட்சாத்த ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் குறிகாட்டுவானுக்கு எடுத்துவரப்பட்டது.
கடந்த பல நாட்களின் முன்பு நைனா நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தரிசனத்தை முடித்து குறிகாட்டுவான் துறைமுகத்தில் தரித்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் படகானது நெடுந்தீவுக்கான சேவையை எப்போது ஆரம்பிக்கும் என்பது தெரியாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருத்த வேலைகள் யாவும் முடிந்து விட்டபோதும் படகினை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
எனவே இது தொடர்பில் அதிகாரிகள் கூடிய கவனம் எடுத்து படகினை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று நெடுந்தீவு மக்கள் வேண்டி நிற்கின்றார்கள்.