தாவடி பகுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமை(16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன்(வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இவர்புதன்கிழமை இரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றார். பின்னர்வியாழக்கிழமை காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Share this Article