தாயுடன் சண்டை!- மகளின் தலை முடியை வெட்டியெறிந்த தம்பதி கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

11 வயதான பாடசாலை செல்லும் சிறுமியின் தலை முடியை வெட்டியெறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கெஸ்பாவ பிரதேசத்தில் நடந்துள்ளது. சிறுமியின் தாயுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே அவர்கள் சிறுமியின் தலைமுடியை வெட்டியுள்ளனர் என்று பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்களான தம்பதி சிறுமியின் தாயைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் வீட்டில் சிறுமி மட்டுமே இருந்துள்ளார்.

சிறுமியிடம் தாய் எங்கே எனக் கேட்டபோது அவர் வீட்டில் இல்லை என சிறுமி தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சிறுமியை பிடித்துக்கொண்ட தம்பதியினர் அவரது தலை முடியை வெட்டினர் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாய் வீட்டுக்கு வந்த பின்னர் வெட்டப்பட்ட தலைமுடியைக் காண்பித்து நடந்த சம்பவத்தை மகள் விவரித்துள்ளார். தலை முடியுடன் மகளையும் அழைத்துக் கொண்டு தாய் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து தம்பதியினரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தம்பதியினரும் கெஸ்பாவ பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். .

சாட்சியமாக நீதிமன்றில் சமர்ப்பிக்கவென வெட்டி எறியப்பட்ட தலை முடியையும் பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Share this Article