தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்று விடுதலை!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
Hands of the prisoner in jail

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் பொதுமன்னிப்பில் இன்று (பெப்ரவரி 2) விடுவிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் இன்னும் இரு மாதங்களில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகவிருந்தவர்கள். மற்றையவர் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அது இரத்துச் செய்யப்பட்ட பின்னரே சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட எஸ்.கிருபாகரன், வி.றொபின்சன் மற்றும் செல்லையா சதீஸ்குமார் ஆகியோர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மகசின் சிறைச்சாலையில் தடுத்துது வைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கிருபாகரனின் தண்டனைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

அதேவேளை, பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ள செல்லையா சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மேன்முறையீடு செய்துள்ளதால் அவர் அதை மீளப் பெறும்வரையில் சிறையில் தடுத்து வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article