டெங்குத் தொற்று வடக்கில் உயர்வு!- மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்து 843 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஆயிரத்து 491 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் நேற்று (ஜூலை 3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்திலேயே அதிகளவு டெங்குத் தாக்கம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண நகர பகுதி, நல்லூர், கரவெட்டி ஆகிய பகுதிகளில் இந்த டெங்குத் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்து 843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள் தென்பகுதியில் இருந்து வந்த ஒருவர் மாத்திரம் டெங்கு தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும் மன்னார் மாவட்டத்தில் 77 பேரும் வவுனியா மாவட்டத்தில் 106 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தமாக ஆயிரத்து 843 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

டெங்குத் தொற்றைத் தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்தழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Article