டி20 அணித் தலைவராக வனிந்து ஹசரங்க?

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை டி 20 கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை நியமிக்க உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது இருபது20 போட்டியில் விளையாட ஆரம்பித்த வனிந்து ஹசரங்க தற்போது வரை 58 போட்டிகளில் 91  விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், டி20  பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கடந்த காலத்தில் முதலிடத்தில் இருந்த வனிந்து, தற்போது தரவரிசையில் 03ஆவது இடத்தில் உள்ளார்.

2021 ஆம் ஆண்டு இலங்கையின் ODI மற்றும் T20 அணித்தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டதுடன், கடந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு நடுவே காயம் காரணமாக, அவரை நீக்கிவிட்டு தற்காலிகமாக குசல் மெண்டிஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும்,  ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவர் பதவி தொடர்பில் புதிய தெரிவுக்குழு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share this Article