ஜெயபுரத்தில் கைப்பற்றப்பட்ட இடியன் துப்பாக்கி – இருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி, அக்கராயன் ஜெயபுரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் சட்டவிரோத ஆயுதங்கள் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (ஜனவரி 3) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவை மீட்கப்பட்டன.

அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேபகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Share this Article