செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா – செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கடந்த 30 ஆம் திகதி செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் கணவன், மனைவி இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். அங்கிருந்த 10 ஆயிரம் ரூபா பணமும் தங்கநகையும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குற்றச் செயலின்போது அணிந்திருந்த ஆடைகளும், திருடப்பட்ட நகைகளும் பை ஒன்றில் மறைக்கப்பபட்டு கிணறு ஒன்றில் வீசப்பட்டமை கண்டறியப்பட்டது.

தற்போது செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article