சூழகம் அமைப்பால் நெடுந்தீவில் உதவி வழங்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவில இயங்கி வரும் சூழகம் அமைப்பினால் புரவிப் புயல் பாதிப்பினை அடுத்தும் கொவிட் 19 நிலமையினைக் கருத்திற் கொண்டும் நெடுந்தீவ பிரதேச செயலகம் மற்றும் வைத்தியசாலை என்பவற்றிற்கு கிருமிநாசினி மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது,

இச் செயற்றிட்டம் கடந்த மாதம் 24ம் திகதி (டிசம்பா் 24 2020) சுழகம் அமைபபினரால் நெடுந்தீவிற்கு நேரடியாக கொண்டு சென்று வழங்கப்பட்டது. சூழகம் அமைப்பின் செயலாளரும் வேலணைப் பிரதேச செயலக உறுப்பினருமான நாவலன் கருணாகரன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் விந்தன் கனகரட்ணம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளா் திரு.கருணாகரன் குணாளன் அவா்களும் கலந்து கொண்டனா்

இச் செயற்பாட்டிற்கான நிதியினை புலம் பெயா் தேசத்தில் வசிக்கும் எம் தாய் மண் மீது பற்க்கொண்ட சச்சிதானம் தவசீலன் அவா்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article