சீனாவின் நன்கொடை டீசல் இன்று முதல் விவசாயிகளுக்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசல் இன்று (ஜனவரி 9) முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சால் உருவாக்கப்பட்டுள்ள செயலி ஊடாக டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என்று அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் செயலி மூலம் விவசாயிகளின் தொலைபேசிகளுக்கு வவுச்சர் படிவம் ஒன்று வழங்கப்படும். இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறித்தொதுக்கப்பட்ட டீசலைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள அறுவடைப் பணிகளுக்காகவே டீசல் விநியோகிக்கப்படவுள்ளது.

Share this Article