சில தினங்களில் குறையவுள்ள எரிவாயு சிலிண்டர் விலை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலக பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் சாதகமான நம்பிக்கையை கொண்டிருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புகிறோம் என்றார்.

அத்துடன், பணவீக்கம் 70% இல் இருந்து 35% ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Article