சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு சிறுமி உட்பட மூவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

13 வயதான சிறுமியை சட்டவிரோத கருக்கலைப்புக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த வருத்தின் இறுதியில் தாயின் 2 ஆவது கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருந்தகத்தில் வைத்து சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிறுமியின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமியின் தாய், அவருடைய 2வது கணவன் மற்றும் மருந்தக உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article