நெடுந்தீவு மகா வித்தியாலய சாதாரண தரம் 2015 , 2018 உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் நேற்றையதினம் (ஜூலை 11) “எங்கட பள்ளிக்கூடம்” எனும் தொனிப்பொருளில் காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது சாதாரண தரம் 2015 உயர்தரம் 2018 பிரவுகளில் கல்விகற்ற மாணவர்களே ஒன்றுகூடலையும் , தற்போதைய ஆசிரியர்களையும்மாணவர்களையும் சந்திக்கின்ற நிகழ்வையும் வித்தியாலயத்தில் ஏற்பாடுசெய்து சிறப்பாக முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்களது ஒன்று கூடலில் போது சக மாணவி அமரர் யே.லக்சினி நினைவாகவும், வித்தியாலயத்தின் 80 ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டும் பாடசாலையின் பாவனைக்காக இரண்டு ஒலிப்பெருக்கிகளை (Sound Box ) அன்பளிப்புச்செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இப்பிரு மாணவர்களது முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டிவருவதுடன் பாடசாலை சமூகத்தினர் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
