சிகரெட், மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இன்று(ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டின் வகைகளுக்கு ஏற்ப நான்கு வகைககளில் 5, 15, 20 மற்றும் 25 ரூபாவால் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, அனைத்து விதமான மதுவரி வீதங்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வழங்கிய உத்தரவின் பேரில் இந்த வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான மதுபானங்களினதும் 750 மில்லிலீற்றர் போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவால் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பியர் போத்தல் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article