சாம்பலோடை இந்து மயானம் மயான அபிவிருத்தி சபையிடம் உத்தியோக பூர்வமாக கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கு எண்ணக்கருவிற்கு அமைய மயானச் செயற்பாட்டினை நிர்வாக ரீதியாக ஒழுங்கமைப்பதன் மூலம் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே நோக்காகும்.

அந்தவகையில் சாம்பலோடை இந்து மயானத்தினை மயான அபிவிருத்தி சபையிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் உடன்படிக்கை ஒப்பந்தம் நேற்று(ஜூலை 24) கைச்சாத்தாகியது.

இந்த ஒப்பந்த உடன்படிக்கை சபையின் செயலாளருக்கும் மயான அபிவிருத்திச் சபை நிர்வாகிகளுக்கும் இடையே இடம்பெற்றதுடன் மயான செயற்பாட்டில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பொதுமக்கள் பயன்பாட்டுத் துறையினை முறையாக பராமரிப்பதற்கு மயான ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தி, அதனை நிர்வகிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article