சப்ரகமுவ பல்கலையின் புதிய வேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மொலகொட, கொடமுதுன்கல ரஜமஹா விகாராதிபதி, அக்கமஹா பண்டித சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23/10) முற்பகல் கையளிக்கப்பட்டது.

 சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் இதற்கு முன்னர் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உபவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.

 அவர் தனது முதன்மைப் பட்டமாக களனிப் பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவம் பற்றிய சிறப்புப் பட்டத்தைப் பயின்றுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம், இந்தியாவின் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் உட்பட கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

 இதற்கு மேலதிகமாக, பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் சீன மொழி பற்றிய டிப்ளோமா கல்வியையும் பயின்றுள்ளார்.

Share this Article
Leave a comment