சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!- ஒருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது நேற்று (ஓகஸ்ட் 2) இரவு கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பளைப் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் பிரணவன் என்பவரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article