கோழி இறைச்சியின் விலையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை இன்று (டிசம்பர் 12) முதல் அதிகரிக்க மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி 30 ரூபா முதல் 50 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ கோழி இறைச்சி 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று முதல் 1,250 ரூபாய்க்கு உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பல பண்ணை உரிமையாளர்கள் இந்த தொகையை நேற்றையதினமே அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முட்டையின் விலையும் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளமையும் சில இடங்களில் அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article