கொரோனாவால் உயிரிழந்த பெண்: உறவினர்களுக்கு விசேட உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அவரது சடலத்தை தகனம்செய்யுமாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை வந்த62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல்காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்தவெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அவரது சடலத்தைதகனம் செய்யவேண்டும் என உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும்அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this Article