குறைந்த செலவில் விடுமுறையை களிக்க சிறந்த இடம் இலங்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பெருந்தொகை பணத்தை செலவிடாமல் பெப்ரவரி மாதத்தில் விடுமுறையைக் கழிப்பதற்கு உலகில் சிறந்த இடம் இலங்கை என பிரிட்டனின் ஐ நியூஸ் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

வேறு நாடுகளுக்குச் சென்று விடுமுறையை கழிப்பதற்கு எதிர்பார்க்கும் உல்லாசப் பயணிகளுக்காக இந்த வருடம் 12 மாதங்களில் பெருந்தொகை பணத்தை செலவிடாமல் சிறந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற 12 நாடுகளின் பெயர் பட்டியலை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழா பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் இடம்பெறும் என்று அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது.

அதேபோன்று விமானப் பயணச் சீட்டுக்களின் விலை பெப்ரவரி மாதத்தில் குறைந்த மட்டத்தில் இருக்கும் என்றும், கடந்த ஏப்ரல் மாதத்தில் 145 ரூபாவாகவிருந்த ஸ்ரேலிங் பவுண் ஒன்று தற்போது 441 ரூபாவாக உள்ளது என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் 15 தினங்களுக்கு இலங்கையின் மலையக பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு ஆயிரத்து 845 ஸ்ரேலிங் பவுண் மட்டுமே செலவாகும் என்றும் ஐ நியூஸ் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share this Article